தஞ்சையில் பிறந்ததாலோ என்னவோ தமிழ் மீது எனக்கு அலாதி பற்று. பாடல் வரிகளை கூர்ந்து கவனிப்பேன். அருமையான வரிகளை மிகவும் ரசிப்பேன். அசிங்கமான பாடல் வரிகளை கண்டால் பொங்கி எழுவேன். அந்த பாடல் ஆசிரியரை திட்டி தீர்ப்பேன். முக்கியமாக இயக்குனர் பேரரசு-வை கண்டால் கடும் கோபம் கொள்வேன். அவன் எழுதும் பாடல் வரிகள் அப்படி. (அர்த்தமற்ற பாடல் வரிகளை பற்றி ஒரு பதிவு எழுதிக்கொண்டு இருக்கிறேன். விரைவில் அதை நீங்கள் இங்கு வாசிக்கலாம்.)
இப்பொழுது வேற ஒன்றை பற்றி பேசுவோம்.
கீழ் கண்ட வாக்கியங்களை வாசிக்கவும்.
"இவர் உழக புகழ் பெற்ற ஓவியர்கலில் ஒருவர். இவர் வரைந்த ஓவியங்கள், இவர் இறந்த பிறகு அதிக விலைக்கு விற்பனை ஆனது. இவர் வால்ந்த போது அங்கீகாரம் பெறாத இவரோட ஓவியம், இவர் இறந்த பிறகு அங்கீகாரம் பெற்றது."
"சென்னை-லேர்ந்து மலர்விலி இந்த பாடல கேட்டிருக்கங்க. அவங்கலுக்காக இந்த பாடல வலங்கறோம். பாத்து என்ஜாய் பண்ணுங்க"
அவசரப்பட்டு நான் பிழையாக எழுதி விட்டதாக நினைக்க வேண்டாம்.
மேற்கண்ட வாக்கியங்கள் முறையே கே டிவி-இலும், சன் மியூசிக்-இலும் கேட்க நேர்ந்தது.
என்னவென்று சொல்வது?
இவர்களுக்கு நாக்கு என்று ஒன்று எதற்கு? சாதார
இவர்களை எல்லாம் விட இவர்களை தேர்வு செய்தவரை உதைக்க வேண்டும். எப்பொழுது திருந்துவார்கள் இவர்கள்?
மன உளைச்சலில்,
விநித்
5 comments:
சாதாரணத்தில் 'ண'-வுக்கு பதில் 'ன' என்று எழுதியுள்ளீர்கள் நண்பரே!
தவறை சுட்டிக் காண்பித்ததற்கு நன்றி வெங்கி. மாற்றி விட்டேன்.
Vidhya, wt abt their dress ? kodumai
adhu maha kodumai sarna... Adhuvum Sun music-la na ketkavenam :banghead:
//Welcome to my blog SARavaNAn :) :)
Tamil thaathavum peranum Tamil valakaranuka..
Post a Comment