செம்மொழியான தமிழ்மொழியாம் - உலகத் தமிழ் மாநாட்டிற்காக ஏ ஆர் ரஹ்மான் உருவாக்கி இருக்கும் பாடல்.
தமிழ் மொழியின் சிறப்பினையும், பழம்பெருமையையும் எடுத்துரைக்கும் "செம்மொழி கீதம்" (Semmozhi Anthem) என்று அழைக்கப்படும் இப்பாடல் எப்படி இருந்திருக்க வேண்டும்? ஆனால் எப்படி வந்திருக்கிறது?
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என TM Soundarajan அட்டகாசமாய் துவக்கி வைக்க, அடுத்த வினாடியே 'யாதும் ஊரே, யாவரும் கேலிர் ('கேளிர்' என்பதே சரி) என பிழையாக உச்சரித்து அதிர்ச்சியளிக்கிறார் ரஹ்மான்.
கார்த்திக், சின்மயி, ஹரிணி, விஜய் ஏசுதாஸ், சுசீலா, என ரம்மியமான குரல்களுடன் பாதி பாடல் பயணிக்க, தவில், நாதஸ்வரம் இணைந்து நம்மைப் பரவசமூட்டும் அந்த தருணத்தில் தான், பெரும் அதிர்ச்சி. மேற்கத்திய Rap இசையுடன் களமிறங்குகிறார் ப்ளாசே (Rap singer Blaze). 'எம்மதமும் ஏற்றுப் புகல்கின்ற (புகழ்கின்ற)' என்று அவர் பாடி நிறுத்த, 'செம்மொலயான தமில்மொலியாம்' என்று ஒரு CHORUS பாடி முடிக்கிறது. அங்கு தடம் மாறி, தடுமாற ஆரம்பிக்கும் தமிழ்மொழி கீதம், கிட்டதட்ட கடைசி வரைக்கும் தடுமாறுகிறது எனபது வேதனை.
தமிழ் மொழியின் பழமையைப் பற்றி பேசும் பாடலின் இசை எவ்வாறு இருந்திருக்கலாம் என்ற எனது கருத்துக்கள்.
> மேற்கத்திய இசை வரும் பகுதி இடைச்செருகல் போல தோன்றுகிறது. தமிழைப் பற்றிய பாடலில், மேற்கத்திய இசையை எதற்கு? தவிர்த்திருக்கலாம்.
> கர்னாடக இசையை வைத்தே முழு பாடலயும் செதுக்கி இருக்கலாம்.
> தமிழ் மொழி உச்சரிப்பில் சிறிது மெனக்கட்டிருக்கலாம்.
> வயலின், வீணை, யாழ், மிருதங்கம் போன்ற இசைக்கருவிகளைப் பயன்படுத்தி, பாடலை அலங்கரித்திருக்கலாம்.

> SP Balasubramaniam, S Janaki, KJ Yesudoss போன்றவர்கள் பாடாதது எனக்கு மிகப்பெரிய குறையாகவே தோன்றுகிறது.
இறுதியாக, பாடல் கேட்டு முடிக்கும்போது, ஏற்படவேண்டிய 'என் தமிழ் மொழி' எனும் உணர்வு, ஏற்படாமலே போய்விடுவது ஏமாற்றம்.
ஆக, செம்மொழி கீதம் என்னைக் கவரவில்லை. ரஹ்மானிடம் எதிர்ப்பார்த்தது இது அல்ல. பெரும் எதிர்ப்பார்ப்புடன் இருந்த எனக்கு, ஏமாற்றமே மிஞ்சியது :-(
இத்தனையும் தாண்டி இதனை ரசிக்க வைக்கும் சில அம்சங்கள்:
> 30 பாடகர்கள், இசை அமைப்பாளர்களின் அணிவகுப்பு .
> தமிழகத்தின் பெருமை வாய்ந்த இடங்களை அழகாய் படம் பிடித்திருக்கும் ஒளிப்பதிவு.
> கௌதம் மேனனின் இயக்கம்.
இசையை பற்றி மட்டுமே பேச விழைந்ததால், காட்சியமைப்பைப் பற்றி அதிகம் எழுதவில்லை.
அன்புடன்,
விநித்...
1 comment:
I share your comments on "Rap" pieces. "Abhaswaram" could have been avoided easily.
Wrong notion of modern-ness floating around.
Post a Comment