இந்த வலைப்பூவிற்கு கிட்டதட்ட பூட்டு போட வேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுவிட்டிருந்தேன். மந்திரப்புன்னகை, எங்கேயும் காதல் படப்பாடல்கள் வெகுவாக கவர்ந்தாலும், விமர்சனம் எழுதமுடியவில்லை. இனியும் எழுத முடியுமா என்பதும் சந்தேகம் தான்.
ஈசன் படப்பாடல்களை கேட்க நேர்ந்தது. ஒரு ஆல்பமாக ஈர்க்கத் தவறினாலும், இதில் உள்ள 'ஜில்லா விட்டு' பாடல் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. உடனே எழுத வேண்டும் என்று தோன்றியது. அதான்.. வந்துட்டேன் :)
'வந்தனம் வந்தனம்' என்று பாடல் தொடங்கும்போதே, ஆட்டம் போட வைக்கும் 'ஊரோரம் புளியமரம்' போன்றொரு பாடலுக்கு தயாரகிவிட்டேன். 'கைகள் தாளம் போடனும், விசில் ராகம் பாடனும்' னு வரிகளைக் கடந்தவுடன் முடிவும் செய்துவிட்டேன். ஆனால் ஏமாற்றம். மறுகனமே 'சுகத்த விக்கும் பொண்ணுக்கும் மனசிருக்கும் கேளுங்க' னு வரிகள் கவர்ந்தன. வித்தியாசமான பாடலுக்கு தயாரானேன்.
8வது பெண்ணாக பிறந்து, துப்பில்லாதவனுக்கு வாக்கப்பட்டு, வயிற்றைக் கழுவ தன் உடலை விற்று பிழைப்பு நடத்தும் ஒரு பெண், தன் கதையை பாடலில் சொல்வது போல் அமைந்துள்ளது இந்த பாடல்.
அருமை... மோஹனின் பாடல் வரிகள், பாடிய தஞ்சை செல்வியின் உருக்கமான குரல் என பாடல் என்னை மிகவும் கவர்ந்திழுத்தது. சில வரிகள் இங்கே...
காய்ச்சலுக்கு காடு வித்தேன்,
இருமலுக்கு நிலம் வித்தேன்...
வித்ததெல்லாம் போக, எச்ச்மாக நானுமே..
அட மிச்சமாக நானுமே...
என்று பாடும்போதே, அடுத்த வரிகளை நம்மால் யூகிக்க முடிகிறது...
உசிர விட மானம் பெரிசு,
புத்திக்க்குத்தான் தெரிஞ்சிச்சு...
வயிறு எங்கே கேட்டிச்சு...
போன்ற வரிகள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின.
கண்டிப்பாக கேட்க வேண்டிய பாடல். மிஸ் பண்ணிடாதீங்க.... அதிரடியான, காதைப்பிளக்கும் இசை, புரியாத வரிகள், அர்த்தமில்லாத வரிகள் என்றிருக்கும் பாடல்களுக்கு நடுவில், இது ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.
பி.கு: படத்தில் இந்த பாடலை எப்படி பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சம்பந்தமில்லாமல் வரும் திருவிழாப் பாடலாகவா அல்லது, ஒரு கதாப்பாத்திரம் தன் கதையை சொல்வது போல் வருகிறாதா என்று தெரியவில்லை. கதாப்பாத்திரம் எனில், அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
விநித்...
Tags: Music Reviews, Song Reviews, jilla vittu vandha kadhai, eesan, easan song review, james vasanthan, thanjai selvi folk song, village song.