சிலருக்கு புகைப்படம் எடுக்கப் பிடிக்கும். சிலருக்கு புகைப்படம் எடுத்துக்கொள்ளப் பிடிக்கும். சிலருக்கு இரண்டுமே பிடிக்கும். நான் 3வது வகையை சேர்ந்தவன். எடுப்பதோ, எடுத்துக்கொள்வதோ, புகைப்படம் என்றாலே தனி குஷி தான் எனக்கு.
இதனை வெளியிட ஒரு உந்துதலாக இருந்த வெங்கி அவர்களுக்கு என் நன்றிகள்.
என்னுடைய கைப்பேசி சோனி W810. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக என்னுடன் இருக்கிறான். இவன் எனது வலக்கரம், தோழன் என்று சொன்னால் மிகை ஆகாது. இவன் எனக்கு எடுத்து் தந்த புகைப்படங்கள் ஏராளம். நிக்கான் L18 கேமிராவிலும் சில படங்கள் எடுத்துள்ளேன். இதோ நான் எடுத்த, முயற்சித்த, சில புகைப்படஙள்.
1. இரவும் பகலும் உரசிக்கொள்ளும் நேரத்தில், சோழங்கநல்லூர் அருகே உள்ள ஒரு கோயிலின் தோற்றம்.
2. எங்கள் குடியிருப்பு பகுதி அருகே உள்ள ஒரு வயல்வெளியில் எடுத்தது. சும்மா சொல்லக்கூடாது. சோனி எரிக்ஸனில் "மேக்ரோ மோட்" கச்சிதமாய் வேலை செய்கிறது.
3. முத்தமிடுவதைப் பார்த்துவிட்டேன் என்று தெரிந்தும், கோபப்படாமல், சிரிக்கும் மலர்கள். துல்லியமாய் படமெடுக்கும் அதே "மேக்ரோ மோட்".
4. காரினுள் நான், வெளியில் மழை. கண்ணாடி வழியே எடுக்கப்பட்டக் காட்சி. என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.
5. (Nikon L18) கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, கிணற்றை படம் எடுக்கப்போய், பூதத்தையும் சேர்த்து எடுத்துவிட்டேன். ஐயோ. மன்னிக்கவும். அது பூதம் இல்லை. என் அண்ண்ன். ஹா ஹா...
மேலும் சில படங்களுடன் பகுதி இரண்டில் சந்திக்கிறேன்.
இன்னும் எடுப்பேன்...
விநித்...