நூறு முறைக்கு மேல் கேட்ட ஒரு பாடலை, ஒரு குறிப்பிட்டத் தருனத்தில் தருணத்தில் கேட்க நேரிடும். அதற்கு முன் தராத பரவசத்தை அந்த பாடல் அந்த தருனத்தில் தருணத்தில் தரக்கூடும். அந்த தருனம் தருணம் ஒரு மழை நாளாகவோ, பயணத்தின் ஒரு நிமிடமாகவோ, அந்தி மாலையாகவோ, அமைதியான நள்ளிரவாகவோ இருக்கலாம். தினமும் பார்க்கும் காதலி திடிரென ஒரு நாள் மிக அழகாய் தோன்றுவாளே, அது போல தான்.
அப்படி ஒரு பாடலைப் பற்றி தான் இங்கு பேச இருக்கிறேன். 'யாரோடு யாரொ' என்று தொடங்கும் யோகி படப்பாடல் தான் அது. இந்த பாடலை, சுமார் 100 முறைக்கு மேல் கேட்டிருந்தாலும், அதற்கு முன் கிடைக்காத ஒரு தனி சுகத்தை ஓரிரவு அனுபவிக்க முடிந்தது. நேர்த்தியான இசை, மயிலறகாய் வருடும் பாடல் வரிகள், பாடல் முழுவதும் இழையும் சாரங்கியின் ஒலி, என பரவசமூட்டுகிறது இப்பாடல்.
'வஞ்சம் கொண்ட நெஞ்சம் உருகுது கொஞ்சம்' என்ற வரிகளுடன் அமர்க்களமாய் பயணிக்கத் துவங்கும் சாரங்கி, பல்லவியின் முடிவில் வரும் Chorus-ஐஇருக்கி இறுக்கி அணைத்துக்கொள்கிறது. பல்லவிக்கும், முதல் சரணத்திற்கும் இடையில் வரும் Interlude -இல் இழையும் சாரங்கி, இதயத்தை துளைத்து எடுக்கின்றது. விவரிக்க முடியாத இன்பம் அது. இவை அனைத்திற்கும் பக்கபலமாக, உஸ்தாத் சுல்தானின் ஆலாபனை.
'முதலும் இல்லாமல், முடிவும் இல்லாமல்' என high-scale-இல் எடுத்து, அடுத்த வினாடியே, 'காலம் புதிர்களை போடுதே' என இறங்கும் இடத்தில், யுவன், தன்னால் ஒரு மெலடியை எப்படி எல்லாம் கையாள முடியும் என்பதை நிரூபிக்கிறார்.
யுவனின் குரலையும், பாடும் விதத்தையும் தவிர்த்துப் பார்த்தால், இந்த பாடல், ஒரு 'மிகச்சிறந்த பாடல்' என்பதில் ஐயம் இல்லை.
//என் தமிழில் பிழை இருந்தால், மன்னிக்கவும்! எடுத்து சொல்லுங்கள். கண்டிப்பாக திருத்திக்கொள்கிறேன். //
--விநித்
Keywords: Yuvan yaarodu yaaro song, saarangi, sarangi theme, yuvan shankar raja usthad sulthan vocals, yogi yarodu yaro song sung by yuvan.
அப்படி ஒரு பாடலைப் பற்றி தான் இங்கு பேச இருக்கிறேன். 'யாரோடு யாரொ' என்று தொடங்கும் யோகி படப்பாடல் தான் அது. இந்த பாடலை, சுமார் 100 முறைக்கு மேல் கேட்டிருந்தாலும், அதற்கு முன் கிடைக்காத ஒரு தனி சுகத்தை ஓரிரவு அனுபவிக்க முடிந்தது. நேர்த்தியான இசை, மயிலறகாய் வருடும் பாடல் வரிகள், பாடல் முழுவதும் இழையும் சாரங்கியின் ஒலி, என பரவசமூட்டுகிறது இப்பாடல்.
'வஞ்சம் கொண்ட நெஞ்சம் உருகுது கொஞ்சம்' என்ற வரிகளுடன் அமர்க்களமாய் பயணிக்கத் துவங்கும் சாரங்கி, பல்லவியின் முடிவில் வரும் Chorus-ஐ