Friday, July 24, 2009

நானும், என் புகைப்படங்களும் - பகுதி-1

சிலருக்கு புகைப்படம் எடுக்கப் பிடிக்கும். சிலருக்கு புகைப்படம் எடுத்துக்கொள்ளப் பிடிக்கும். சிலருக்கு இரண்டுமே பிடிக்கும். நான் 3வது வகையை சேர்ந்தவன். எடுப்பதோ, எடுத்துக்கொள்வதோ, புகைப்படம் என்றாலே தனி குஷி தான் எனக்கு.

இதனை வெளியிட ஒரு உந்துதலாக இருந்த வெங்கி அவர்களுக்கு என் நன்றிகள்.

என்னுடைய கைப்பேசி சோனி W810. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக என்னுடன் இருக்கிறான். இவன் எனது வலக்கரம், தோழன் என்று சொன்னால் மிகை ஆகாது. இவன் எனக்கு எடுத்துதந்த புகைப்படங்கள் ஏராளம். நிக்கான் L18 கேமிராவிலும் சில படங்கள் எடுத்துள்ளேன். இதோ நான் எடுத்த, முயற்சித்த, சில புகைப்படஙள்.

1. இரவும் பகலும் உரசிக்கொள்ளும் நேரத்தில், சோழங்கநல்லூர் அருகே உள்ள ஒரு கோயிலின் தோற்றம்.


2. எங்கள் குடியிருப்பு பகுதி அருகே உள்ள ஒரு வயல்வெளியில் எடுத்தது. சும்மா சொல்லக்கூடாது. சோனி எரிக்ஸனில் "மேக்ரோ மோட்" கச்சிதமாய் வேலை செய்கிறது.


3. முத்தமிடுவதைப் பார்த்துவிட்டேன் என்று தெரிந்தும், கோபப்படாமல், சிரிக்கும் மலர்கள். துல்லியமாய் படமெடுக்கும் அதே "மேக்ரோ மோட்".



4. காரினுள் நான், வெளியில் மழை. கண்ணாடி வழியே எடுக்கப்பட்டக் காட்சி. என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.


5. (Nikon L18) கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, கிணற்றை படம் எடுக்கப்போய், பூதத்தையும் சேர்த்து எடுத்துவிட்டேன். ஐயோ. மன்னிக்கவும். அது பூதம் இல்லை. என் அண்ண்ன். ஹா ஹா...


மேலும் சில படங்களுடன் பகுதி இரண்டில் சந்திக்கிறேன்.

இன்னும் எடுப்பேன்...
விநித்...

9 comments:

Venkatesh Kumaravel said...

சோனி W810-ஐ... அருமையான ஃபோன்... அட்டகாசமான ஃப்ளாஷ் தான் அதன் சிறப்பம்சம்!
ஆஹா... தமிழ் வலையுலகிற்கு இன்னுமொரு நல்ல புகைப்படக்காரர். PiT-Photography in Tamil வாங்க விராஜன்... நண்பர்கள் நிறைய பேர் கிடைப்பாங்க. இந்த மாதிரி ஜீவராசிகள் தனியா இருக்குறதை விட கூட்டமாய் இருந்தா இன்னும் டாப்பா வேட்டையாடலாம். வாழ்த்துகள்.. தொடரவும்! மைய நண்பர்களுக்கு பி.எம் அனுப்புங்க, வந்து பார்ப்பாங்க!

Vinith said...

நன்றி வெங்கி. நிச்சயம். ஜோதில ஐக்கியம் ஆயிடறேன். கலக்கிடலாம். :)

Ramal said...

very good yaar.... :thumbsup:

Anonymous said...

Simply superb!

Keep guessing w3ho this is :D
I'd give u 3 chances....hmm...take 4 :P

thamizhparavai said...

ஃபோட்டோ அனைத்தும் அருமை எனினும் எனது சிறப்பு விருப்பம் கடைசிப் படம்...
தமிழ்லயும் எழுத ஆரம்பிச்சாச்சா...?
வாழ்த்துக்கள்...

Vinith said...

நன்றி தமிழ்ப்பறவை!

தமிழ்ல எழுதனும்னு ரொம்ப நாளா ஆசை. ஆமாம். இனிமே தமிழ்ல நிறைய பதிவுகளை இங்க நீங்க பார்க்கலாம். கூடிய விரைவில், தமிழிலேயே ஒரு தனி வலைப்பூ ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். முயற்சிக்கறேன். :-)

Vinith said...

Hey anon. Thanks for the comments :)

Hmmm. I guess you are from hub :P

It's really challenging to guess :'(

Anyway, my guesses here!

Sarna,
Wibha,
RNithya,
MS :)

I know you are none of the above. LOL.

Yoganathan.N said...

அருமை நண்பரே... 4-வது படம் என்னுடைய favourite...
U got Nikon camera??? Woow...
Continue the good work... Snap more.
வாழ்த்துகள் :)

Vinith said...

nandri yoga :)

innum sila padangaL edukkapattu, kidappil podapattullana.. ha ha... viravil, ingE padhivu seigiren :)

Yes. Nikon L18 :)